கேரளா தங்க கடத்தல் வழக்கில் என்ஐஏ அளித்த அறிக்கை..!
கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மற்றும் ரொக்கம் குறித்து அமலாக்கப் பிரிவினருக்கும், வருமான வரித்துறைக்கும் என்ஐஏ அறிக்கை அனுப்பியுள்ளது.
தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ், சரித் நாயர் ஆகியோர் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்த ஒரு கோடி ரூபாய் மற்றும் ஒரு கிலோ தங்கம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்த தேசிய புலனாய்வு முகமை சார்பில் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் திருவனந்தபுரம் பெடரல் வங்கி லாக்கரில் இருந்து 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் ஸ்டேட் வங்கி இந்தியா லாக்கரில் இருந்து 64 லட்சம் ரூபாயும், 982.5 கிராம் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த பணமும் நகையும் தங்க கடத்தல் மூலம் ஈட்டியதாக என்ஐஏ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மற்றும் ரொக்கம் குறித்த மற்றுமொரு அறிக்கை தேசிய புலனாய்வுத் துறை சார்பில் கொச்சி அமலாக்கத்துறைக்கும் வருமான வரித்துறைக்கும் மேல் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.







