புதிய மாவட்டங்களை உருவாக்கி புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்..!
அதிமுகவில் அமைப்பு ரீதியாக புதிய மாவட்டங்களை உருவாக்கி புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், புதிதாக மாவட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக 31 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு இரண்டு முதல் ஐந்து தொகுதிகள் வரை பிரித்து வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பிவி.ரமணா உள்ளிட்டோருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் இசக்கிமுத்து, புத்திசந்திரன் உள்ளிட்ட பதினொரு பேர் அமைப்பு செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளனர். அமைச்சர் கா பாண்டியராஜன், பாப்புலர் முத்தையா, நடிகை விந்தியா ஆகியோர் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.







