தொழிற்சாலையில் தமிழில் பேச தடை விதிப்பு..! தொழிலாளர்கள் போராட்டம்..!
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசுவதற்கு தடை விதித்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருவங்காட்டில் ராணுவத்திற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் கொரொனா பாதுகாப்பு குறித்து தொழிலாளர்கள் உயரதிகாரிகளுடன் கோரிக்கை விடுத்துள்ளனர் .
அப்போது உயரதிகாரிகளுடன் தமிழில் பேசக் கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் பேசவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழில் பேசதடைவிதித்த மேலாளர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உயர் பொறுப்பில் தமிழ் மொழி தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






