--- --:--:-- --

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்..!

9

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

கல்விக் கட்டணம் நிர்ணயித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த சுமார் 6 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் அமலுக்கு வரவுள்ளதாக தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டண நிர்ணயக்குழு அறிவுறுத்தியுள்ளது . 20ஆம் தேதி முதல் பரிந்துரைகளை கட்டண நிர்ணயக் குழுவின் இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி தனியார் பள்ளிகள் இதுவரை வசூலித்த கல்வி கட்டண விபரம் தற்போதைய செலவுகளுக்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டிய கல்விக் கட்டணம் மற்றும் எதிர்பார்க்கும் கல்வி கட்டணம் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் பள்ளி நிர்வாகிகளை நேரில் அழைத்து அவர்களின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யும் .

 

வரும் கல்வியாண்டில் பள்ளி தொடங்குவதற்கு முன்பாக இந்த புதிய கட்டண நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் ஏற்கனவே உள்ள கட்டணத்தை விட குறைந்த பட்சம் 15 சதவீதம் உயர்த்தப்படுகிறது. பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட மிகப்பெரிய பள்ளிகளுக்கு அதிகபட்சம் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும்.

Leave a Reply

Right Menu Icon