--- --:--:-- --

தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை ஜாமீன் கோரி மனு..!

11

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது சார்பில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர்களால் கைது செய்யப்பட்ட ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 பாதுகாவலர்கள் நீதிமன்ற காவலில் இருக்கின்றனர். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக பால்துரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Right Menu Icon