இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகலாம் : உச்ச நீதிமன்றம்
மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கேட்கும் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி மருத்துவர் டிஜி பாபு என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசும், அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தங்களை இணைத்துக் கொண்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை என்று கருத்து தெரிவித்த தோடு சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களை அணுகுமாறு உத்தரவிட்டது.
இதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இட ஒதுக்கீடு தொடர்பாக சலோனி குமார் என்பவர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் உடனடியாக விசாரிக்க மறுத்தார்.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.







