” நான் மரண படுக்கையில் இருக்கிறேன்…பாய் ” என இன்ஸ்டாவில் பதிவிட்டவுடன் உயிரிழந்த நடிகை..!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகை திவ்யா சாக்சே தான் மரணப்படுக்கையில் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்தார். திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரப் படங்களில் நடித்து வரும் மாடலுமான நடிகை திவ்யா சாக்சே புற்று நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் தான் மரணப்படுக்கையில் இருப்பதாகவும் அதே சமயம் உறுதியாக இருப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை திவ்யா தனது ரசிகர்களுக்கு பாய் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை பதிவிட்டு அடுத்த சில மணி நேரத்தில் நடிகை திவ்யா உயிரிழந்த செய்தியை அவரது உறவினர் சௌமியா வெளியிட்டார்.
28 வயதே ஆன இளம் நடிகை திவ்யா சாக்சே புற்றுநோயால் இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.







