தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் கொரொனாவுக்கான சிகிச்சையை வழிமுறைகளில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் தொற்றை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறையை பரிந்துரை செய்ய உள்ளது. பிளாஸ்மா என்பது ரத்தத்தில் உள்ள ஒரு திரவம். 45% சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் உள்ளன.
55% தான் பிளாஸ்மா வைரஸ் மனித உடலில் வந்தால் அதை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை தான் தோன்றுகின்றன. இதன் காரணமாக பல நோய்களை குணப்படுத்தலாம் என கூறப்படுகிறது. எனவே ப்ளாஸ்மா தானமும் செய்யப்படுகிறது. பிளாஸ்மா தானம் செய்வோருக்கு ரத்தம் தானம் செய்பவர்கள் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
அந்த பரிசோதனைக்கு பின்னர் அவரது உடலிலிருந்து பிளாஸ்மா பிரித்து எடுக்கப்படுகிறது.
இந்த சிகிச்சை முறையின் மூலம் பல்வேறு மாநிலங்களில் நோயாளிகள் உடல் நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது. எனவே தமிழகத்திலும் பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பாஸ்மா சோதனை முறையில் பாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்துள்ளனர். எனவே 62 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்மா சிகிச்சையை நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே தகுதியானவர்கள் தயக்கமும் பயமும் இன்றி தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.







