--- --:--:-- --

விவாகரத்து செய்த பெண்ணை மீண்டும் திருமணம் செய்யக்கூறி துன்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை..!

3

சென்னையை எடுத்த மதுரவாயலில் விவாகரத்தான முதல் மனைவியுடன் மீண்டும் வாழ வேண்டும் என்று உறவினர்கள் அடித்து உதைத்ததால் மன உளைச்சல் அடைந்த இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பிரித்திவிராஜ் என்ற 34 வயது இளைஞருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்த நிலையில் பிரித்திவிராஜ் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தது. சத்யாவின் சகோதரர்கள் தாமு, இளையராஜா ஆகியோர் பிருத்விராஜை மாமல்லபுரத்தில் இருக்கும் வீட்டில் தங்க வைத்து தங்களது தங்கையை மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி அடித்து உதைத்து இருக்கின்றனர்.

 

இதற்கிடையே அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்த பிரித்திவிராஜ் மன உளைச்சல் அடைந்து வீட்டில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon