--- --:--:-- --

சாலையோரம் மயங்கிய வடமாநில பானிபூரி தொழிலாளிக்கு உதவிய போலீஸ்..!

5

மதுரை மாவட்டம் மேலூரில் சாலையோரம் பசியால் மயங்கி கிடந்த வடமாநில தொழிலாளர்கள் காவல்துறையினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். வடமாநில தொழிலாளி ஒருவர் சாலையோரம் மயங்கி கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததையடுத்து காவல்துறையினர் அவரை விசாரித்தனர்.

 

அந்த இளைஞரின் பெயர் பெங்கு மிஸ்ரா என்பதும் திருமங்கலத்தில் உள்ள பானை தொழில் கடையில் வேலை செய்ததும் தெரியவந்தது. பொது முடக்கம் காரணமாக இரண்டு மாதமாக ஊதியம் வழங்காததால் வேறு வழியின்றி சொந்த ஊரான உத்திரப் பிரதேசத்திற்கும் நடை பயணம் மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

 

அவருக்கு உணவு வாங்கி கொடுத்த காவல்துறையினர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக கூறி அழைத்து சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon