--- --:--:-- --

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகத்தில் மத்திய குழு இன்று ஆய்வு..!

4

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை 5 பேர் கொண்ட குழு இன்று சென்னையில் ஆய்வு நடத்துகிறது. மத்திய அரசின் கூடுதல் செயலாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு தமிழக மக்களை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர். பெங்களூரில் இருந்து சென்னை வந்துள்ள மருத்துவ நிபுணர்கள் இங்கு மூன்று நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon