--- --:--:-- --

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கன மழை..!

3

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் பெய்த மழை மண்ணை குளிரச் செய்தது. இடைவிடாது பெய்த மழையால் அண்ணா சாலை உள்ளிட்ட இடங்கள் குளம் போல் காட்சியளித்தன.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காவேரி, முத்து உடையான்பட்டி, வைப்பு கோயில், அணைபட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்த தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருவதால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவில், ஆட்டுக்காரன் ஊர், திண்டமங்கலம், கமலபுரம் புளியம்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை வெளுத்து வாங்கியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் வடக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon