--- --:--:-- --

சாத்தான்குள சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவு..!

2.1

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைதான மேலும் ஐந்து காவல்துறையினருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லதுரை, முத்து ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பால் துறை, தாமஸ் ஆகிய இருவரும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

அதனைத் தொடர்ந்து மற்ற மூவரும் தூத்துக்குடி குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மூவரும் பலத்த பாதுகாப்புடன் பேரூரணி மாவட்ட சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

 

இதனிடைய மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள பால்துரை, தாமஸ் ஆகியோரை சந்தித்து நீதிபதி 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply

Right Menu Icon