--- --:--:-- --

தங்கை முறையான சசிகலாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் பெண் மரணம் : திமுக முன்னாள் நிர்வாகிகளுக்கு சம்பந்தம்

1

செய்யூர் அருகே இளம்பெண் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதில் காவல்துறையினர் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த நயினார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண் கடந்த 24 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

 

இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சசிகலாவின் பெரியப்பா மகன்களான திமுக முன்னாள் நிர்வாகிகள் புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர் சசிகலாவின் திருமணத்திற்கு தடை ஏற்படுத்தி வந்தது தெரியவந்தது.

 

சகோதரி முறையான சசிகலாவை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சசிகலா வீட்டில் தனியாக இருந்தபோது இன்று சசிகலா வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற புருஷோத்தமன் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகம் ஆடுவதாக சசிகலாவின் தாயார் மற்றும் சகோதரி குற்றம்சாட்டியுள்ளனர்.

 

மேலும் அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து சகோதரர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் புருஷோத்தமன் கடந்த 4ஆம் தேதி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தார்.

 

ஆனால் இரண்டு வாரங்களாக தேவேந்திரன் எங்கு இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் அவரை கைது செய்வதில் காவல்துறையினர் மெத்தனம் காட்டுவதாக சசிகலாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon