--- --:--:-- --

தமிழக அமைச்சர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதி… தங்கமணிக்கு கொரோனா தொற்று.. சி.வி.சண்முகத்துக்கு மூச்சுத் திணறல்

78t

தமிழக அமைச்சர்கள் இருவர் இன்று மருத்துவமனனயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின் துறை அமைச்சர் தங்கமணிக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் கெரோனா பாதிப்புக்கு இதுவரை 10 எம்எல்ஏக்கள் ஆளாகியுள்ளனர். இதில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சையில் உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் அரசியல் புள்ளிகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் இருவர் இன்று சென்னையில் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய மகனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அமைச்சர் தங்கமணி, நேற்று முன்தினம் அதிமுகவில் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக ஐவர் அணியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 4 மணி நேரம் பங்கேற்றதுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையுல் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிமுகவினரை கலக்கமடையச் செய்துள்ளது. மேலும் நாமக்கல்லில் உள்ள அமைச்சர் தங்கமணியின் அலுவலகமும் அவசரமாக சீல் வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் இன்று சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகமும் திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதயக் கோளாறு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சி.வி.சண்முகம், கடும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் இன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon