--- --:--:-- --

செமஸ்டர் தேர்வுகளை நடத்த தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு…!

9

பத்தாம் வகுப்பு மாணவர்களைப் போல் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சுய உதவி பாலிடெக்னிக் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் அவர்கள் அனுப்பியுள்ள மனுவில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் ஒத்திவைக்கப்பட்ட செமெஸ்டெர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

 

கல்லூரிகள் நடத்திய யூனிட் டெஸ்ட் மதிப்பெண்களை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்திடவும், மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது தனியார் பாலிடெக்னிக் சங்கம். மாணவர்கள் மேற்படிப்பு மற்றும் பணிக்கு செல்ல கடைசி ஆண்டு பருவ தேர்வுகள் முக்கியமானது என்பதால் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டு இருப்பதாக அந்த சங்கத்தினர் கூறினர்.

 

பல மாநிலங்களில் கல்லூரி தேர்வு ரத்து செய்யப்பட்டது போல தமிழகத்திலும் பருவத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon