தென்கொரியாவில் டிரோன்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட வித்தியாசமான விழிப்புணர்வு..!
Drones fly over the Han river showing messages to support the country as measures to avoid the spread of the coronavirus disease (COVID-19) continue in Seoul, South Korea, July 4, 2020. Picture taken July 4, 2020. Yonhap via REUTERS
உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் திணற செய்துள்ளது. உலக மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கொரொனா பரவல் அதிகமாவதற்கு கொரொனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளதே காரணம் எனவும் சொல்லப்படுகிறது. எனவே கொரோனா விழிப்புணர்வு பல இடங்களில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
அதுபோன்ற வித்தியாசமான கொரொனா விழிப்புணர்வு தென்கொரியாவில் அரங்கேற்றப்பட்டுள்ளது. தென்கொரியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டிரோன்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தலைநகர் சியோலில் உள்ள ஆற்றங்கரையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலமாக முககவசம் அணிதல் தனிமனித இடைவெளி பயன்பாடு குறித்த உருவாக்கப்பட்டன நிகழ்வினை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்.







