--- --:--:-- --

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

4.1

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மற்றும் ஜெயங்கொண்டத்தில் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் நெல் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்து வருகிறது.

 

தொடர் மழையால் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கூடலூரில் நெல் விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாற்றங்கால் தயார் நிலையில் இருப்பதால் நிலத்தைப் பண்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆடி மாத தொடக்கத்தில் பயிர்களை நடவு செய்யப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon