--- --:--:-- --

அலட்சியமாக செயல்பட்ட பிரேசில் அதிபர் போல்சனரோவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

5

பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் மத்தியில் இந்த தகவலை முக கவசம் அணிந்தவாறு போல்சனாரோ அறிவித்தார். தன்னுடையது விளையாட்டு வீரனின் உடம்பு என்றும் கொரொனா தன்னை தொற்றினாலும் கூட அது லேசான காய்ச்சல் உடன் முடிந்து போகும் என்றும் அதிரடியாக கூறியவர் போல்சனாரோ.

 

கொரொனா தொற்று அதிகரித்தபோது முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவதை பிரேசில் அதிபர் வழக்கமாக வைத்திருந்தார். மூன்று முறை கொரொனா பரிசோதனை செய்து கொண்ட போல்சனாரோவுக்கு மூன்று முறையும் சாதகமான முடிவை கிடைத்தது. இந்த நிலையில் தான் காய்ச்சல், உடல் வலி என பாதிக்கப்பட்டு தற்போது கொரொனா தொற்றாளராக மாறியுள்ளார் பிரேசில் அதிபர்.

 

கொரொனாவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பொது முடக்கத்தை பிரதான ஆயுதமாக கையில் எடுத்த நிலையில் அதற்கு முரணான நிலைப்பாட்டை எடுத்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார் போல்சனாரோ. கொரோனாவுக்கு பொது முடக்கம் தீர்வு அல்ல என்றும், கொரொனா தொற்றை விட பொது முடக்கம் தான் அதிக பாதிப்புகளை தரும் எனவும் போல்சனாரோ தெரிவித்திருந்தார்.

 

போல்சனாரோவின் இந்தக் கருத்துடன் உடன்படாத சுகாதாரத்துறை அமைச்சர்கள் இருவர் ஒருவர் பின் ஒருவராக பதவி விலகினர். முன்னதாக கொரொனாவை போல்சனாரோ அலட்சியமாக கையாள்வதாக கடுமையான புகார்கள் எழுந்தன. உலகிலேயே கொரொனா பாதிப்பில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றான பிரேசில் அதிபருக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கொரொனாதொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் போல்சனாரோ வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நண்பர் போல்சனாரோ கொரொனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon