--- --:--:-- --

9 முதல் 12 ஆம் வகுப்புக்கான பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு – சி‌பி‌எஸ்‌இ

11

கொரொனா பரவல் காரணமாக 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 30% குறைக்கப்படுவதாக சிபிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக சி‌பி‌எஸ்‌இ நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதன் அடிப்படையில் தேசிய கல்வி வாரியத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இன்னும் பள்ளிகள் திறக்கப்படாததால் 2020 – 2021 ஆம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்புகளில் பாட அளவை 30 சதவீதம் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இதற்காக அமைக்கப்பட்டுள்ள கல்விக் குழுக்கள் இறுதி செய்துள்ள பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் சிபிஎஸ்இ பாடங்களின் அளவு குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது நினைவுகூறத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon