--- --:--:-- --

பொய் வழக்கு போட்டு இளைஞரை தாக்கி கைது செய்ய போலீசார்..! இளைஞர் தற்கொலை முயற்சி..!

4

திருச்சி மாவட்டம் துறையூரில் சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் துறையினர் தாக்கியதால் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. கொள்ளம்பட்டியை சேர்ந்த ரகுநாத்தை ஜூன் 5 ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

அங்கு காவல் துறையினர் தாக்கியதில் வலி தாங்க முடியாமல் ரகுநாத் பூச்சி மருந்தை குடித்துள்ளார். மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் காவல் நிலையத்தில் வைத்து உப்பு சோப்பு கரைசலை காவலர்கள் குடிக்க வைத்துள்ளனர். நிலைமை மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.

 

சிகிச்சைக்குப் பின் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜாமினில் வெளிவந்த ரகுநாத் தன்னை பொய் வழக்கில் கைது செய்ததாக துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன் உள்ளிட்ட காவலர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon