--- --:--:-- --

சர்வதேச சுகாதார நிறுவனத்திலிருந்து விலகிய அமெரிக்கா..!

5

சர்வதேச சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா முறைப்படி தெரிவித்துள்ளது. கொரொனா விவகாரத்தில் சீனாவின் ஊதுகுழலாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைப்பில் இருந்து விலகுவதாகவும் கடந்த மே மாதம் கூறியிருந்தார்.

 

தற்போது அதற்கான முறைப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும், இந்த அறிவிப்புக்கு பின்பு சர்வதேச சுகாதார நிறுவனத்தின் விதிகளின்படி அமெரிக்கா இன்னும் ஓராண்டுக்கு தொடரமுடியும். சூழல் மாறும்போது தன் முடிவை மாற்றிக் கொண்டு அந்த அமைப்பின் ஒரு அங்கமாக தொடரமுடியும்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜோபிடன் தான் வென்றால் மீண்டும் சர்வதேச சுகாதார நிறுவனத்தில் இணையப் போவதாக வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Right Menu Icon