--- --:--:-- --

அரசியல்வாதிகளை கலங்கடிக்கும் கொரோனா… அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும் தொற்று பாதிப்பு..!

14

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்ச கட்டத்தில் உள்ளது. இதற்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல என்பது போல், தமிழகத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் உட்பட திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்த சோகமும் நடந்துள்ளது. எம்எல்ஏக்கள் மட்டுமின்றி அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உதவியாளர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி செயலாளர் ஒருவரும் சமீபத்தில் உயிரிழந்தார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்தி, ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் மனைவி, மகன்களுக்கு என கொரோனா பாதிப்பு பட்டியல் நீள்கிறது. இந்நிலையில், சென்னையில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்தக் கொடிய கொரோனா காலத்தில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் நின்று நிவாரணப் பணிகள் மேற்கொள்ளும் அரசியல் புள்ளிகளுக்கும் கொரோனா பாதிப்பு தொற்றுவதால் பலரும் கலக்கத்தில் உள்ள ை ர். இதனால் கொரோனா பீதியால், அரசியல்வாதிகள் பலரும் வெளியே நடமாடுவதையே தவிர்க்கத் தொடங்கி விட்டனர் என்றே கூறலாம்.

Leave a Reply

Right Menu Icon