--- --:--:-- --

கடலூரில் விசாரணக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழப்பு..! சாத்தான் குளம் சம்பவத்தை தொடர்ந்து வெளிவரும் லாக்அப் மரணம்..!

6

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்ட வழக்கை தமிழக அரசு மீண்டும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு சூடு பிடித்துள்ளதால் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லாக் அப் மரணங்களை அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

காட்டுமன்னார்கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காவல் நிலைய ஜன்னலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்ட வழக்கை மீண்டும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

உருத்திர சோலை கிராமத்தை சேர்ந்த இளைஞர் வினோத் வங்கி ஏடிஎம்களில் பணம் திருடியதாக காட்டுமன்னார்கோவில் போலீசார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

 

அன்று இரவு காவல் நிலைய ஜன்னல் கம்பியில் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல் செய்தும் எந்த பலனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon