--- --:--:-- --

இந்திய விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயார் என டிக் டாக் நிர்வாகம் அறிக்கை!

7

இந்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக டிக் டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிக் டாக் நிறுவனத்தின் இந்திய தலைவர் நெகில் காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

 

விளக்கங்களை அளிப்பதற்கும், பதிலளிப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாக அரசு பிரதிநிதிகளை சந்திப்பதற்கு இந்திய அரசு அழைப்பு விடுப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பயனர்களின் எந்த தகவலையும் சீன அரசு உட்பட எந்த வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

பயனர்களின் விபரங்களை உயர் பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் நிகில் காந்தி குறிப்பிட்டுள்ளார். டிக் டாக், ஷேரிட், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அடுத்து கூகுள், ஆப்பிள் பிளே ஸ்டோரிலிருந்து இந்த செயலிகள் அனைத்தும் அதிகாரபூர்வமாக நீக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon