ஊரடங்கால் மூடப்பட்ட கோவில்கள் 100 நாட்களுக்குப் பிறகு இன்று திறப்பு..!
கொரோனா பரவலைத் தடுக்க இந்த மாதம் 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இருப்பினும் சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிராமப்புறங்களில் உள்ள சிறிய வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இதனால் 100 நாட்களுக்கு பிறகு கோவில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபட்டனர். தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று முதல் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க உள்ளன. முழு அளவில் பணியாளர்களை ஈடுபடுத்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தயாராகி வருகின்றன.






