கொரொனா குறித்து வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பிய நபர் கைது..!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயற்கையாக உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் வீடியோவை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டவர் கொரொனாவால் உயிரிழந்ததாக பொய் செய்தி பரப்பிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வெலிங்டன் நல்லப்பன் தெருவை சேர்ந்த வீரப்பன் என்பவர் கடந்த 22ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரொனா இல்லை என்பது உறுதியானது. ஊரடங்கு அமலில் உள்ளதாலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பதாலும் முதியவரின் உடலை குறைவான உறவினர்களுடன் சுகாதாரத்துறையினர் அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் இந்த காட்சிகளை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு குன்னூரில் முதல் கொரொனா உயிரிழப்பு என்றும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் புதைக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் பரப்பியுள்ளனர். இது தொடர்பாக கார்த்திக் என்ற நபர் மீதும் வாட்ஸ்அப் குழுவின் அட்மின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






