திருப்பூரில் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர்..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் லாரியின் முன்பு விழுந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தாராபுரத்தில் பழனி – ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் சென்டர் மீடியன் அருகே நண்பர் ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். பிறகு திடீரென ஓடிச்சென்று சாலையில் வேகமாக சென்ற லாரி முன் விழுந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் யார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







