பிரேசிலில் 700 கி.மீ தூரத்தை அடைந்த மின்னல்…!
பிரேசிலில் தோன்றிய மின்னல் வெட்டு 700 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்து புதிய சாதனை படைத்து இருப்பதாக ஐநா வின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிரேசிலில் கடந்த 2018
ஆம் ஆண்டு தோன்றிய மின்னல் உலக சாதனையை பதிவு செய்துள்ளது.
அதாவது லண்டனிலிருந்து சுவிட்சர்லாந்தின் பாசெல் பகுதிக்கு இடையேயான தூரத்திற்கு சமமான தொலைவு இந்த மின்னல் ஏற்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி அமெரிக்காவில் ஓக்லகாமாவில் ஏற்பட்ட மின்னலே அதிக தூரத்தை அடைந்த மின்னல் என சர்வதேச வானொலி மையத்தால் அங்கீகரிக்கப்பட்டு இருந்தது.
அது 321 கிலோ மீட்டர் வரை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அதனை விட இரு மடங்கு அதிக தூரம் கொண்ட மின்னல் பிரேசிலில் ஏற்பட்டதையடுத்து புதிய சாதனை படைத்துள்ளது.







