தண்டனை காலம் முடிவதற்கு முன்பே சசிகலா விடுதலை ஆக உள்ளாரா?
Chennai: AIADMK General Secretary V K Sasikala after attending the party's MLA's meeting in which she was elected as a AIADMK Legislative party leader, set to become Tamil Nadu CM, at Party's Headquarters in Chennai on Sunday. PTI Photo by R Senthil Kumar(PTI2_5_2017_000104B)
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுதலை ஆவார் என பாரதிய ஜனதா பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார். எனவே தண்டனை காலம் முடிவதற்கு முன்பே சசிகலா விடுதலை ஆக உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோரது தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.
அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தாலும் அவரது நன்னடத்தையை சுட்டிக்காட்டி முன்கூட்டியே சசிகலாவை வெளியே கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு சசிகலா எப்போது விடுதலை ஆவார் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது என பெங்களூர் சிறை நிர்வாகம் தெரிவித்து வந்தது.
அதே சமயம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு சசிகலாவை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதே அவர் தரப்பை சேர்ந்தோரின் விருப்பமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் சுதந்திர தினத்தையொட்டி நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை விடுவிக்க கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ள பட்டியலில் சசிகலாவையும் சேர்க்க அவர் தரப்பு முயன்று வருவதாக கூறப்படுகிறது.
அதனை உறுதி செய்யும் வகையில் பாஜக தேசிய நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ளதாக பதிவிட்டுள்ளார்.சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தவும் சசிகலா தரப்பு முனைப்பு காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அதனால் விரைவில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இளவரசி சுதாகரன் ஆகியோரும் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.







