--- --:--:-- --

இந்தியாவுக்கு ஆதரவாக படைகளை களமிறக்க அமெரிக்கா தயார்..!

2

இந்தியாவிற்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் அமெரிக்கா தனது படைகளை அனுப்பும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. லடாக் எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவு சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

 

இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையையும் மீறி சீனா தனது கட்டமைப்புகளை எல்லையில் நிறுத்தி இருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்தன. இதனால் இந்திய – சீன எல்லையில் பதற்றம் நீடித்துள்ளது.

 

இந்த நிலையில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் அதிகமாகி வருவதால் உலக அளவில் படைகளை நிறுத்த அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

 

சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு தங்களிடம் போதிய படை இருப்பதாக தெரிவித்த மைக் பாம்பியோ சீனாவின் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் இடங்களில் தங்கள் படைகளை களமிறங்குவோம் என சூளுரைத்தார். இதனால்தான் ஐரோப்பியாவில் இருந்து நாடோ படைகளை திரும்பப் பெறுவதாகவும் ஆபத்து இருக்கும் இடங்களில் இனி அமெரிக்கப் படைகள் இருக்கும் என்றும் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon