--- --:--:-- --

வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து

5

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு விமான சேவைகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான காரணம் பல்வேறு நகரங்களில் கொரொனா இதுவரை கட்டுப்பாட்டில் இல்லை. அங்கே விமான சேவைகள் அதிகரித்ததன் மூலமாகவும், வெளிநாடுகளிலிருந்து திரும்பி வருபவர்கள் மூலமாகவும் கொரோனா பாதிப்பு மேலும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த தடை தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

கேரளாவில் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் வேறு மாநிலத்தில் இருந்து வருபவர்கள் என படிப்படியாக அதிகரித்துக் கொண்டுள்ளது.

 

ஏற்கனவே கொரொனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மும்பை. டெல்லி. சென்னை போன்ற மாநகரங்களில் சர்வதேச விமானங்கள் மூலமாக இந்தியாவிற்கு வருபவர்கள் கொரொனா தொற்றுடன் வந்தால் இதன் மூலமாக கொரொனா எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ஆகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon