--- --:--:-- --

டெல்லியில் கொரொனா சிகிச்சைக்கு தயாராகியுள்ள 13,500 படுக்கைகள்..!

2.1

டெல்லியில் கொரொனா சிகிச்சைக்காக 13 ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் கொரோனா பாதிப்பு எழுபத்தி நான்காயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நாள்தோறும் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கொரொனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.

 

கொரொனா பரிசோதனை அதிகரிக்கும்போது தொற்று எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கொரொனா சிகிச்சைக்காக 13,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ஐ‌சி‌யு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.

 

இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்திய அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon