கணவனை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டு ஆண் நண்பருடன் சென்ற பெண்!
சேலத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை அடித்து கொலை செய்து புதைத்து விட்டு இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு தலைமறைவான மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
சூரமங்கலத்தை அடுத்த செஞ்சிக்கோட்டையை சேர்ந்தவர்கள் சேட்டு பூங்கொடி தம்பதி. இரண்டு நாட்களாக பூட்டிக்கிடந்த இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் அடித்து கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட சேட்டுவின் உடலை மீட்டனர்.
விசாரணையில் சோளம்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கும் பூங்கொடிக்கும் தவறான தொடர்பு இருந்து வந்ததும் அதனை சேட்டு கண்டித்ததால் அந்த நபரோடு சேர்ந்து அவரை அடித்துக் கொன்று புதைத்தது தெரிய வந்துள்ளது. தந்தைக்கு என்னவாயிற்று எங்கு சென்றார் என்பதை அறியாமல் அவர்களது இரண்டு குழந்தைகளும் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.
பூங்கொடியும் அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.






