டெல்லியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டம்..!
தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. தொற்று அதி வேகமாக பரவும் நிலையில் இங்குள்ள அனைவருக்கும் வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கொரொனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள அனைவருக்கும் வீடு வீடாகச் சென்று வரும் 30-ஆம் தேதிக்குள் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரொனா வைரஸ் தொற்று நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்த படியாக டெல்லியில்தான் அதிகமாக உள்ளது. இங்கு சுமார் 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,300 பேர் இறந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் நாட்டிலேயே அதிக அளவாக 3,900 தொற்று டெல்லியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்திப்புக்கு பின் புதிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டு இதன்படி அனைவரையும் சோதிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.






