பெண்ணை பார்த்து கண்ணடித்து சில்மிஷம் செய்த நபருக்கு செருப்படி!
வேலூர் அரசு மருத்துவமனையில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபரை அந்தப் பெண்மணி செருப்பால் அடித்து விரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல்துறை விசாரணையில் தெரியவந்தது என்ன? வேலூரில் பிரதானமான அரசு மருத்துவமனை அருகில் உள்ளது. சாதாரண நாட்களிலேயே இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வார்கள்.
தற்போது கோடைகாலம் என்பதால் கூட்டம் மிகவும் குறைந்துவிட்டது என்று மற்றும் அவசர சிகிச்சைக்காக மக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குமிடத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த ஒரு நபர் அந்தப் பெண்ணை பார்த்து கண்ணடிப்பது கையை உதறி சிக்னல் காட்டுவதாக இருந்தார். சிறிது நேரத்தில் அந்தப் பெண் அமர்ந்து இருந்த பகுதியில் போய் அமர்ந்தார். அடுத்து பெண்ணின் அருகே சென்று அவர் பெண்ணின் கையை பிடித்து உள்ளார். அவ்வளவுதான் ஆத்திரமடைந்த அந்தப் பெண் தன் காலில் இருந்த செருப்பை கழற்றி அந்த நபரை சரமாரியாக அடித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த அவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். திடீரென இந்த தாக்குதலை எதிர்பாராத அந்த நபர் நிலைகுலைந்தார். அவரை பிடித்து மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் வேலூரை அடுத்த கணம் மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த 35 வயதான பரசுராமன் என்பது தெரிய வந்தது. தற்போது கோடைகாலம் என்பதால் குறைந்த அளவு போலீசாரை பணியில் இருப்பதால் உடனடியாக அவர் காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார் அங்கு விசாரணை நடந்து வருகிறது.






