--- --:--:-- --

தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

5

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு மணி நேரம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. பாதிரி பெருதூர், சென்னாவரம், மும்முணி அமையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

 

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பஸ் நிலையம், செவிலிமேடு, வாலாஜாபாத், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம், சின்ன காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.

 

இதற்கிடையில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகம் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon