--- --:--:-- --

ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகளுக்கு இடையே முத்தரப்பு கூட்டம் – உலகின் முன்னணி நாடுகளுக்கு எடுத்துக்காட்டாய் திகழ வேண்டும்!

4

உலகின் முன்னணி நாடுகள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் திகழும் வண்ணம் செயல்பட வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரிக் நாடுகள் என்றழைக்கப்படும் ரஷ்யா, இந்தியா, சீனா இடையிலான முத்தரப்பு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.

 

இதில் இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். ரஷ்யா மற்றும் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பேசிய ஜெய்சங்கர் சர்வதேச விதிகளை மதித்தல், உலக நாடுகளின் ஒற்றுமையை ஆதரித்தல், பொது நலத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலமே உலக நன்மை களை உருவாக்க முடியும் என்று கூறினார்.

 

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை நிலவும் நிலையில் இந்த முத்தரப்பு பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon