--- --:--:-- --

ரேஷன் கடைகளுக்கு சென்று யாரும் பணம் வாங்க முடியாது!

1.1

கொரொனா பரவல் அதிகமாக இருப்பதால் நான்கு மாவட்டங்களுக்கு பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. கொரொனா தொற்று அதிகமாக இருந்ததால் மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

 

இதனால் கொரோனா நிவாரண உதவியாக பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் வீடுகளுக்கே சென்று விநியோகிக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் அமலாகி உள்ள நிலையில் இதுவரை 50 சதவீதத்திற்கும் மேலான பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரேஷன் கடைகளில் நிவாரண உதவித் தொகை வழங்கப்படவில்லை என விளக்கமளித்தார்.

Leave a Reply

Right Menu Icon