--- --:--:-- --

பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த காசியை வீட்டில் வைத்து சிபிசிஐடி விசாரணை!

11

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் கைதாகியுள்ள காசியை நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவர் மீது இதுவரை 6 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். காசியின் நண்பர் கைது செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து விசாரணை ஈடுபட்டுள்ள காவல்துறையினர் பெண்களிடம் மோசடி ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை சேகரிக்கத் தொடங்கினர்.

 

காசி நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களையும் விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நான்காம் நாளான நேற்று வீட்டிற்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர். இன்றுடன் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான அவகாசம் முடிவடைகிறது.

Leave a Reply

Right Menu Icon