--- --:--:-- --

ஊரடங்கால் வறுமையாலும் பசியாலும் வாடி கோவில் அன்ன தானத்தை நம்பியிருக்கும் முதியவர்கள்!

9

கொரொனா பொது முடக்க நேரத்தில் ஆதரிக்க யாருமின்றி கோயிலில் கிடைக்கும் அன்னதான பார்சலை எதிர்பார்த்து கோயில் வாசலில் முதியோர் காத்திருக்கும் நிலை உள்ளது . ஆதரவற்ற முதியவர்கள் நிலையைப் பதிவு செய்யும் தொகுப்பை பார்க்கலாம். நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள ராமர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கப்படுகிறது.

 

தற்போது அந்த கோவிலில் கொடுக்கப்படும் ஒருவேளை உணவை எதிர்பார்த்து அங்கு 30 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற வேலை வாய்ப்பில்லாத வயது முதிர்ந்தோர் வெளியே காத்துக் கிடக்கிறார்கள். வயது முதிர்வை கூட பாராமல் வேலை செய்துவந்த நிலையில் கொரொனா பொது முடக்க நேரத்தில் வேலை கிடைக்காமல் கோவில் அன்னதானத்தை எதிர்பார்த்திருப்பதாக சில முதியவர்கள் கூறுகிறார்கள்.

 

கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தமிழகம் தவிக்கும் நிலையில் வேலையில்லாத அரவணைக்க யாரும் இல்லாத நிலையில் உள்ள முதியவர்களின் நிலை வருந்ததக்கதாக மாறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon