--- --:--:-- --

இராணுவ வீரர் குடும்பத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட தி மு க பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் 2 லட்சம் நிதியுதவி வழங்கினார்

இராணுவ வீரர் குடும்பத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட தி மு க பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் 2 லட்சம் நிதியுதவி வழங்கினார்

லடாக் பகுதியில் இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் ஆவார். இவரது தம்பியும் இராணுவ வீரர் ஆவார்.வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி கடந்த 1999-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். 22 ஆண்டுகள் ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றி துணை ஹவில்தார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

 

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த பழனிக்கு வானதிதேவி (35) என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனர். பழனி உயிரிழந்த செய்தியை கேட்டதும் அவருடைய குடும்பத்தினர் கதறினர். கிராமமே சோகத்தில் மூழ்கியது. பழனியின் உடல் ராணுவ விமானத்தில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு இன்று (புதன்கிழமை) அவரது சொந்த ஊரான கடுக்கலூர் கிராமத்துக்கு எடுத்து வரப்பட்டு நாளை காலை இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இராணுவ வீரர் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியும் மாவட்ட சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்
உடன் தி மு க கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon