நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கேள்வி!
இந்திய பரப்பை சீனா எப்படி ஆக்கிரமித்தது என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்கள் . காணொளி வாயிலாக பேசியவர் சீனாவுடனான மோதலில் எத்தனை வீரர்கள் காயமடைந்தனர் என்றும் எத்தனை பேர் காணாமல் போய் விட்டனர் என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
உயிரிழந்த 20 இராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும் இக்கட்டான நேரத்தில் அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தர இறைவனை வேண்டுவதாக சோனியா கூறியுள்ளார்.







