--- --:--:-- --

கல்விக் கட்டணம் கட்ட வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது புகார்..!

8

நீலகிரி மாவட்டத்தில் பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டி தனியார் பள்ளிகள் வற்புறுத்தி வருவதால் விழிபிதுங்கி இருக்கிறார்கள் பெற்றோர்கள்.

 

பொது முடக்கம் காரணமாக வருவாய் இன்றி பலரும் தவித்து வரும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் கல்வி கட்டணத்தை கட்டியே ஆகவேண்டும் என தனியார் பள்ளிகள் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பது பெற்றோருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

 

ஆன்லைன் வகுப்பை காரணம்காட்டி பள்ளிகள் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதாகவும் இதனால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றது. கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது அரசின் உத்தரவை மீறும் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon