--- --:--:-- --

அமெரிக்காவில் ஜார்ஜை தொடர்ந்து மற்றொரு நபர் போலீசாரின் தாக்குதலால் உயிரிழப்பு! வெடிக்கும் போராட்டம்!

America Protests Global Tunisia

America Protests Global Tunisia

கருப்பின இளைஞர் ஜார்ஜ் போலீஸ் அதிகாரி ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற போராட்டம் லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஏராளமானோர் அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தென் கொரியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜார்ஜ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிளாக் லிவ்ஸ் மேட்டர் பதாகையை காட்சிப்படுத்தி இருந்தது. லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் தேசியத்திற்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் வலதுசாரி ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

இந்நிலையில் அட்லாண்டாவில் ரேஷன் ட்ரூப்ஸ் என்ற 27 வயது இளைஞர் துரித உணவகம் முன்பு பார்க்கிங் பகுதியில் காரில் அமர்ந்தவாறே தூங்கியுள்ளார். இதனால் பாதை தடை போட்டதாக அங்கிருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் மதுபோதையில் இருந்த அவரை கைது செய்ய முயன்றனர்.

 

அதற்கு உடன்பட மறுத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தப்ப முயன்ற நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

நான்கு மகள்களுக்கு தந்தையான அவர் கடந்த வெள்ளிக்கிழமை தான் ஒரு மகளின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஏற்கனவே ஜார்ஜின் மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டங்கள் தனியாக சூழலில் மேலும் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் போராட்டக்காரர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 

அதன் எதிரொலியாக அட்லாண்டா நகரில் போராட்டம் வெடித்ததோடு அவர் சுட்டுக்கொல்லப்பட்ட உணவகம் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அவரின் குடும்பத்தினரும் அந்த உணவகம் முன்பு திரண்டு கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பொறுப்பேற்று அட்லாண்டா நகரில் காவல் தலைமை அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

அவர் ஆரம்பம் முதலே போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் துப்பாக்கியால் சுட்ட போலீஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அட்லாண்டா நகர மேயர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon