--- --:--:-- --

இ-பாஸ் இல்லாமல் கோயம்பேட்டிலிருந்து கோவைக்கு பயணம் செய்த நபருக்கு கொரொனா! சுகாதாரத்துறை குழப்பம்!

13

சென்னையிலிருந்து அடுத்த மாவட்டத்திற்கு ஒருவர் பயணிப்பதற்கு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் கோயம்பேட்டில் இருந்து கோவை வரை யார் கையிலும் சிக்காமலே பயணித்திருக்கிறார் ஒரு வியாபாரி. கொரோனா பரவலை தடுக்க சாலைகளின் சோதனை, இ பாஸ், காவல்துறையில் இருந்து தப்பி விதிமுறையெல்லாம் மீறி சென்னையில் இருந்து ஒருவர் நீலகிரி பயணம் செய்துள்ளார்.

 

சென்னை கோயம்பேட்டில் காய்கறி கடை நடத்தி வந்த அந்த 54 வயது நபர் நடைபயணமும்ம் லாரி பேருந்து பயணம் என சுமார் 500 கிலோமீட்டர் எந்த சோதனையும் இன்றி நீலகிரிக்கு நுழைந்துள்ளார். கோயம்பேடு முதல் வேலூர் வரை நடைபயணம், வேலூர் முதல் சேலம் வரை லாரி பயணம், சேலத்தில் இருந்து கோவைக்கு பேருந்து என அமைந்தது அவரது பயணம்.

 

மேட்டுப்பாளையம் வரை சோதனையும், பரிசோதனையும் இன்றி தப்பியவர் நீலகிரி செல்லும் வழியில் சோதனைச்சாவடியில் கேள்விக்கு உள்ளானார். கோயம்பேடு டு கோவை என்ற பயணத்தை கேட்டதும் அவருக்கு கொரொனா பரிசோதனை செய்தனர் அதிகாரிகள்.

 

தனிமையில் இருக்கும் படி அறிவுறுத்தி அவரை சுகாதாரத்துறையினர் அனுப்பியதால் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கெட்டி கிராமத்திற்கு சென்ற அவர் தனிமை அறிவுறுத்தலை காற்றில் பறக்கவிட்டு ஒரு வாரமாக ஊருக்குள் சகஜமாக நடமாடி உள்ளார். தற்போது அவருக்கு தொற்று உறுதியானதால் அந்த கிராமத்திற்கு விரைந்து அதிகாரிகள் அந்த நபரை கோவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

கிராமத்தில் வியாபாரியுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி விட்டாலும் சென்னையில் இருந்து அவர் பயணித்து வந்த வாகனங்கள் நடைபயணத்தில் நடந்த சந்திப்புகள் எங்கு உணவு உட்கொண்டார் என கண்டறிவதில் பெரும் சிக்கலை சந்தித்துள்ளனர்.

 

அதிகாரிகள் சென்னையில் இருந்து அடுத்த மாவட்டம் செல்ல அதிரடி கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் இவரது கோயம்பேடு டு கோவை பயணம் ஏற்ற கண்காணிப்பு இல்லாத பயணம் குழப்பத்தை ஏற்படுத்தவே செய்கிறது.

Leave a Reply

Right Menu Icon