--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்!

5

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள அன்பழகன் கடந்த 2ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள கொரொனா பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

 

தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிர் காக்கும் கருவி மூலம் அன்பழகனுக்கு 80 சதவீத ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 67 சதவீதம் மட்டுமே தேவைப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பைவிட அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon