--- --:--:-- --

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நாளை ‘ஒளிரும் தமிழ்நாடு’- மாநாடு

6

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது குறித்து விவாதிக்க இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நாளை நடைபெறும் ‘ஒளிரும் தமிழ்நாடு ‘ என்ற காணொளி மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அதில் தமிழ்நாட்டை தொழில்துறையில் முன்னணி மாநிலமாக திகழ செய்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாளை காலை 11 மணியளவில் இந்திய கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொளி மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில்வளம் பற்றிய கையேட்டையும் முதலமைச்சர் வெளியிடுவார் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த மாநாட்டில் 500க்கும் அதிகமான முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகவும் புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon