--- --:--:-- --

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு ’ரெம்டெசிவர்’ மருந்தை பயன்படுத்த அனுமதி!

9

1223960456

அமெரிக்க மருந்து நிறுவனமான கிளாடின் ரெம்டெசிவர் மருந்தினை கொரொனா சிகிச்சையில் பயன்படுத்துவதற்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு அனுமதி அளித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய மருந்து ஒழுங்குமுறை அமைப்பான சிபிஎஸ்‌சி‌ஓ இந்த ஒப்புதல் அளித்துள்ளது.

 

இதன்படி ரெம்டெசிவர் மருந்தினை தீவிரமான கொரொனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல ஊசி வழியாக மட்டுமே ரெம்டெசிவரை செலுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மருந்தினை இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதோடு இதனை சில்லரை வணிகத்தில் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரின் பரிந்துரையின் மட்டுமே இந்த மருந்தினை விற்பனை செய்யவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எவ்வித சோதனையும் இன்றி மருந்துகளுக்கு வகை செய்யும் புதிய மருந்து மற்றும் மருத்துவ சோதனை விதிகள் 2019 இல் உள்ள சிறப்பு பிரிவின் கீழ் ரெம்டெசிவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon