--- --:--:-- --

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதா?

13

சென்னை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக சென்னை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன்செயல்பட்டு வருகின்றன.

 

ஐந்தாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்களிலும் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் சென்னை காவல் நிலைய மாவட்டத்திற்குட்பட்ட கோடம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் சில கடைகள் முன்பு தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon